news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் கோயில்
tv

Also Watch

tv

Read this

கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் கோயில்

கணுவாய், கோவை

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Temple News

கருணாம்பிகை அம்மன் கோயில் :

கோவை கணுவாய் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான பிரசக்திபெற்ற அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை நடைபெறும் திருக்குட நன்னீராட்டுப் பெரும் சாந்தி பெருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

கடந்த 13ம் தேதி மஹா கணபதி ஹோமம், லட்சுமி பூஜையுடன் தொடங்கிய விழாவில்

கஜபூஜை (யானை)

அஸ்வபூஜை (குதிரை)

கோபூஜை (பசு)

ரிஷப பூஜை (காளை)

உஷ்ட்ர பூஜை (ஒட்டகம்)

பூஜைகள் நடைபெற்றன.

அதன்பின்னர் மங்கள இசையுடன் முதல்கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. 14ம் தேதி காலை 2ம் கால யாக வேள்வி பூஜைகள், மாலை 3ம் கால யாக வேள்வி பூஜை, தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

15ம் தேதி இன்று காலை 4ம் கால யாக பூஜைகளுடன் தொடங்கிய விழாவில் பிம்பசுத்தி, நாடிசந்தனம், மஹா பூர்ணாகுதி நடைபெற்று யாக சாலையில் இருந்து தீர்த்தகுடங்கள் சுவாமி, அம்மாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரங்களுக்கு கொண்டுவரப்பட்டு கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு மஹா தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவில் கணுவாய், பன்னீர்மடை, சோமையம்பாளையம், சோமையனூர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் அறக்கட்டளை நிர்வாகக்குழு, திருப்பணிக்குழு மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.


Related Link
6 மூத்த தம்பதியினருக்கு மரியாதை

6 மூத்த தம்பதியினருக்கு மரியாதை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
7 hrs 8 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved