என்கவுன்ட்டரின்போது கொள்ளையனால் தாக்கப்பட்ட குமாரபாளையம் காவல் ஆய்வாளரை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் டிஐஜி உமா ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். கேரளாவில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்களை நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது நடைபெற்ற என்கவுன்ட்டரில், கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவலர் ரஞ்சித் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.