news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகளுக்கு வரன்தேடி தாய்க்கு தகாத உறவு
tv

Also Watch

tv

Read this

மகளுக்கு வரன்தேடி தாய்க்கு தகாத உறவு

தொழிற்பேட்டை, கரூர்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காலி இடத்தில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த ஆண் சடலம். அருகிலேயே கிடந்த வாட்டர் பாட்டில். காக்கிகளை கண்டதும் அஞ்சி நடுங்கிய உயிரிழந்த நபரின் மனைவி. கட்டிய கணவனை கள்ளக்காதலன் மூலம் மனைவியே கொலை செய்தது அம்பலம். மகளுக்கு வரன்பார்க்கிறேன் என்றபெயரில் தாய் தனக்கு தகாத வரன் தேடியதால் நிகழ்ந்த பயங்கரம். கள்ளக்காதலியின் கணவனை கொலை செய்த சமையல் மாஸ்டர் சிக்கினாரா? பின்னணி என்ன?

சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை
பெட்ரோல் பங்க்ல இருந்து கொஞ்ச தூரத்துல உள்ள காலி இடத்துல ஒரு ஆண் சடலம் எரிஞ்சி கருகிப்போய் கிடந்துருக்குது. அந்த பக்கம் இயற்கை உபாதை கழிக்கப்போன சிலர் சடலத்த பாத்து அதிர்ச்சியாகி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் மோப்ப நாய் உதவியோட தடயங்களை சேகரிச்சிருக்காங்க. அப்போ, சடலம் பக்கத்துலயே ஒரு காலி வாட்டர் பாட்டில் இருந்துருக்குது. அந்த பாட்டில்ல இருந்து பெட்ரோல் வாசமும் வந்துருக்குது. அதுக்குப் பிறகு, பெட்ரோல் பங்க்ல இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு பண்ணிருக்காங்க. அதுல, இரவுநேரத்துல ரெண்டுபேரு சேர்ந்து காலி இடத்துக்குப் போறதும், அடுத்த கொஞ்சநேரத்துல அந்த ரெண்டுபேருல ஒருத்தர் மட்டும் பெட்ரோல் பங்குக்கு வந்து வாட்டர் பாட்டில்ல பெட்ரோல் வாங்கிட்டு போற காட்சியும் பதிவாகி இருந்துருச்சு. அதோட, அந்த நபர் வீட்டுக்கு திரும்பி போறப்ப தன்கூட வந்த நபர் இல்லாம தனியா போன காட்சியும் இருந்துருக்குது. அதனால, அந்த ரெண்டுபேரும் யாரு? அவங்களுக்கு எந்த ஊருனு விசாரணையில இறங்கிருக்காங்க போலீசார். அப்போ, உயிரிழந்து கிடந்த நபர் கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் அப்டிங்குறது தெரியவந்துச்சு. அடுத்து அவரோட வீட்டுக்குப்போய் மனைவிக்கிட்ட விசாரிச்சிருக்காங்க போலீசார். அப்போ, செந்தில்குமாரோட மனைவிக்கு கை, கால் எல்லாம் நடுங்கிருக்குது. அந்த நடுக்கத்துக்கான காரணமே அடுத்து நடந்த கிடுக்குப்பிடி விசாரணையிலதான் வெளியவந்துச்சு.

பாண்டீஸ்வரியிடம் அடிக்கடி பேசிய ராஜமாணிக்கம்
54 வயசான செந்தில்குமார் ஒரு பிரைவேட் டெக்ஸ் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. அதேமாதிரி, நாமக்கல் ஒருவந்தூரை பூர்வீகமாகக் கொண்ட ராஜமாணிக்கமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே கரூர் தொழிற்பேட்டைக்கு வந்து குடியேறி சமையல் மாஸ்டரா வேலை பாத்துட்டு இருக்காரு. அதோட, திருமண புரோக்கராவும் இருக்காரு ராஜமாணிக்கம். அதனால, தன்னோட மூத்த பொண்ணுக்கு வரன் பாக்குமாறு ராஜமாணிக்கத்துக்கிட்ட சொல்லிருக்காங்க செந்தில்குமாரோட 47 வயசான மனைவி பாண்டீஸ்வரி. மாப்பிள்ளைகளோட போட்டோவ பாண்டீஸ்வரிக்கு அனுப்புன ராஜமாணிக்கம், அடிக்கடி போன் பண்ணி பேசவும் ஆரம்பிச்சிருக்காரு. மனைவி சமையல் மாஸ்டர்கிட்ட அடிக்கடி பேசுனத பாத்த கணவன், வேற புரோக்கர் மூலமா மாப்பிள்ளை பாத்துக்கலாம், அவரோட பேச வேண்டாம்னு சொல்லிருக்காரு.

பாண்டீஸ்வரி-ராஜமாணிக்கத்தை கண்டித்த செந்தில்குமார்
இதக்கேட்டு கடுப்பான பாண்டீஸ்வரி, அது உங்களுக்கு பிறந்த பொண்ணே இல்லை, அதனால இந்த விஷயத்துல நீங்க தலையிட வேண்டாம்னு கத்திருக்காங்க. காரணம், 47 வயசான பாண்டீஸ்வரி ஏற்கெனவே ஒருவரை கல்யாணம் பண்ணி ஒரு மகள் பிறந்தபிறகு அவரை டைவர்ஸ் பண்ணிட்டுதான் ரெண்டாவதா செந்தில்குமாரை கல்யாணம் பண்ணிருக்காங்க. அவர, கல்யாணம் பண்ணினபிறகு ரெண்டு மகன்கள் பிறந்துருக்காங்க. இதுக்குமத்தியிலதான் மகளுக்கு வரன் பாத்துருக்காங்க பாண்டீஸ்வரி. அதனால, கணவன் கண்டிச்சத காதுல வாங்காம சமையல் மாஸ்டர்கிட்ட பேசுன பாண்டீஸ்வரிக்கு அவரோட தகாத உறவு ஏற்பட்ருக்குது. சமையல் மாஸ்டரோட அடிக்கடி வெளிய போன மனைவி பாண்டீஸ்வரியை ஒருநாள் கையும் களவுமா பிடிச்ச கணவன் செந்தில்குமார் ரெண்டுபேரையுமே வார்ன் பண்ணிருக்காரு. ஆனா, அந்த வார்னிங்கை ரெண்டுபேருமே கண்டுக்கல. இருந்தாலும், தகாத உறவுக்கு இடையூறா இருக்க செந்தில்குமாரோட கதையை முடிச்சிராலாம்னு ராஜமாணிக்கமும், பாண்டீஸ்வரியும் பிளான் பண்ணிருக்காங்க. அந்த பிளான்படி, செந்தில்குமாரை மது விருந்துக்கு கூப்டுருக்காரு ராஜமாணிக்கம்.

எதையும் கண்டு கொள்ளாதே என செந்தில்குமாருக்கு மிரட்டல்
மகளுக்கு கல்யாணம் பண்ணக்கூடிய வயசுல தாய் தகாத உறவுல இருந்தா ஊர்ல நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்கதான், அதனால அந்த விவகாரத்தை நாமளே பேசி முடிச்சிக்கலாம்னு சாந்தமா பேசி செந்தில்குமாரை கடந்த 25 ஆம் தேதி நைட் 8 மணிக்கு அழைச்சிட்டுப்போய்ருக்காரு ராஜமாணிக்கம். சணப்பட்டி R.S. புதூர் சாலையில ஆள்நடமாட்டம் இல்லாத காலி இடத்துல வச்சி ரெண்டுபேரும் மது குடிச்சிருக்காங்க. அப்போ, எங்களோட தகாத உறவுக்கு நீதான் இடையூறா இருக்க, எதையும் கண்டுக்காம இருந்துக்கிட்டா பாண்டீஸ்வரி உன்கூட சேர்ந்து வாழ்வாங்க, இல்லனா உன்னையை கொன்னுட்டுதான் நாங்க சேர்ந்து வாழ்வோம்னு மிரட்டிருக்காரு ராஜமாணிக்கம். அதக்கேட்டு, ஆத்திரப்பட்டு ராஜமாணிக்கத்தை அடிக்க பாஞ்சிருக்காரு செந்தில்குமார். அப்போ, பக்கத்துல கிடந்த காலி பீர்பாட்டிலை உடைச்சி செந்தில்குமாரோட தலையில அடிச்சதோட, ஏற்கெனவே மறைச்சி எடுத்துட்டு வந்திருந்த கத்தியால கழுத்த அறுத்தும் கொலை பண்ணிருக்காரு ராஜமாணிக்கம்.

சிறையில் கம்பி எண்ணும் ராஜமாணிக்கம்-பாண்டீஸ்வரி
அதுக்குப்பிறகு பக்கத்துல உள்ள ஒரு பெட்ரோல் பங்க்லபோய், பைக் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துல நிக்கிறதாகவும், தன்னால தள்ளிட்டு வர முடியலனும் சொல்லி வாட்டர் பாட்டில்ல பெட்ரோல் வாங்கிட்டுப்போன சமையல் மாஸ்டர், செந்தில்குமாரோட சடலத்த எரிச்சிட்டு எதுவுமே தெரியாதமாதிரி அங்க இருந்து போய்ட்டாரு. அடுத்து, பாண்டீஸ்வரிக்குபோன் பண்ணி கொலை செஞ்ச விவரத்தை தெளிவா சொன்ன சமையல் மாஸ்டர், ஒரு வாரம் தான் தலைமறைவாகினாதான் போலீசுக்கு தன்மேல சந்தேகம் வராதுனு சொல்லிட்டு காட்டுப்பகுதிக்கு ஓடிட்டாரு. போலீசாரோட விசாரணையில நடுங்கிக்கிட்டே ஒட்டுமொத்த உண்மையையும் பாண்டீஸ்வரி சொல்லிட்டாங்க. அதுக்குப்பிறகு சமையல் மாஸ்டரை தேடுற வேலையில ஈடுபட்டாங்க போலீசார். ரெண்டு நாட்கள் காவல்துறையோட கண்ணுலயே சிக்காத சமையல் மாஸ்டர் மூணாவது நாள் சிக்கிட்டாரு. மகளுக்கு வரன் பாக்குறேங்குறபேர்ல தனக்கு தகாத வரன் பார்த்த பாண்டீஸ்வரியும், சமையல் மாஸ்டரும் இப்ப ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்காங்க.

Related Link
மகள் மீது தீராத சந்தேகம்

மகள் மீது தீராத சந்தேகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 2 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved