உடுமலையில் திமுக மூத்த முன்னோடிகள் 1200 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூதாட்டி ஒருவர் முத்தம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தான் துணை முதல்வராக, இளைஞரணி செயலாளராக வரவில்லை என்றும் உங்கள் பேரனாக இங்கு வந்துள்ளேன என நெகிழ்ச்சியாக கூறினார்.துணை முதல்வருக்கு முத்தம் வழங்கிய மூதாட்டி உடுமலைப்பேட்டையில் பல்வேறு திமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சாமிநாதன், சக்கரபாணி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நன்றி சொன்ன தூய்மை பணியாளர்கள் முன்னதாக உடுமலை நகர் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூலகம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்த துணை முதல்வர் மறைந்த திமுக கட்சியினுடைய பொறுப்பாளர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காலை உணவு வழங்கிய தமிழக முதல்வருக்கு தூய்மை பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிஇதனை தொடர்ந்து திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட அளவிலான திமுக மூத்த முன்னோடிகள் 1,200 பேருக்கு சால்வை அணிவித்து, பொற்கிழியை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வராகவோ, இளைஞரணி செயலாளராகவும் நான் வரவில்லை உங்களின் பேரனாக உங்களைப் பார்க்க வந்துள்ளேன்" என நெகிழ்ச்சியாக கூறினார். கலைஞருடைய மறு உருவமாக பார்க்கிறேன்மேலும் கழக முன்னோடிகள் அனைவரும் பெரியார், அண்ணா, கலைஞருடைய மறு உருவமாக பார்ப்பதாக தெரிவித்த அவர், மேற்கு மண்டல நிர்வாகிகள் 80 ஆயிரம் நபர்களை சந்திக்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று மாலை நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொள்ள உற்சாகமாக உள்ளதாகவும் தெரிவித்தார். திமுக தொடங்கி 76 ஆண்டுகள் ஆனபொழுதும் இன்றும் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது அதற்கு முழுமுதற் காரணம் கழகத்தினுடைய மூத்த நோடிகளான நீங்கள் தான் என பேசிய அவர் அதிமுகவோ, பாஜகவோ இதுபோன்ற விஷயங்களை ஒரு நாளும் கொண்டாட முடியாது எனவும் தெரிவித்தார். ஒரு காலமும் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முடியாதுமகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடலாம் என ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார்கள் மேலும் தேர்தலை காரணம் காட்டி நீதிமன்றத்தை நாடி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடலாம் என நினைத்தார்கள் ஆனால் தலைவர் மகளிருக்கு அந்த தொகை சென்று சேர வேண்டும் என முடிவெடுத்து வழங்கி உள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். காலை 7:00 மணிக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது ஆனால் மக்கள் 9 மணிக்கு வங்கியில் பணம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள் ஏனென்றால் ஒன்றிய அரசு அந்த பணத்தை விட்டு வைக்காது என மக்களுக்கு தெரியும் என தெரிவித்த அவர், 2026 தேர்தலிலும் கழக ஆட்சிதான் தொடரும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளின் நிச்சயமாக நாம் வெல்வோம் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். Related Link வீடு வீடாக பிரச்சாரத்தை துவங்கிய தவெக