இந்தியர்களின் தேவைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் முதல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், நாட்டின் ஆராய்ச்சி துறையில் உள்ள தடைகளை கண்டறிந்து அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் தற்போதைய பிரச்னைகளுக்கு புதிய தீர்வுகளை கண்டுபிடிப்பதாக ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் எனவும், பிரச்னைகள் உலகளாவியதாக இருந்தாலும் அவற்றின் தீர்வுகள் இந்திய தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர்மயமாக்கப்பட வேண்டும் என்றார்.