சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் நீரோட்டத்துக்கு தடையாக இருக்கும் கருவேல மரங்கள் மற்றும் நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட 3,500 கன அடி தண்ணீர், மானாமதுரையை வந்தடைந்துள்ளது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கும், கண்மாய்களுக்கும் சென்றடைய முடியாத அளவுக்கு வைகை ஆற்றில் சீமைக் கருவேல மரங்களும், நாணல் செடிகளும் வளர்ந்துள்ளன. துகுறித்த கழுகுப் பார்வை காட்சி வெளியாகி உள்ளது.