news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்லூரிக்கு படிக்க செல்வது தொடர்பாக தகராறு
tv

Also Watch

tv

Read this

கல்லூரிக்கு படிக்க செல்வது தொடர்பாக தகராறு

அனுப்பர்பாளையம், திருப்பூர்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruppur suicide

படிக்க செல்வது தொடர்பாக தகராறு :

திருப்பூர் அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் இவரது மகன் விகாஸ் கண்ணன். சிறிய அளவில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கும் திருப்பூர் கன்னாங்காடு பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவரது மகள் ஷோபியா (19). என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி திருமணம் நடைபெற்றது. (விகாஷ் கண்ணனுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை விகாஸ் கண்ணன் குடும்பத்தினர் நகை அணிவித்து முழு செலவை ஏற்று திருமணம் செய்துள்ளனர்.

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷோபியா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்தார் அப்போது கணவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 15 தினங்களாக ஷோபியா தனது தாய் வீட்டில்
இருந்து வந்துள்ளார். பெற்றோர் சமாதானம் செய்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் வீட்டிற்கு சென்ற நிலையில் ஷோபியாவிற்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது அவரை பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து குழந்தைக்காக கணவன் விகாஸ் கண்ணன் இனிமேல் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனை கேட்காமல் நேற்று ஷோபியா கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் ஷோபியா கல்லூரியிலிருந்து வீடு திரும்பியவுடன் கணவன், மனைவிக்கு இடையே கல்லூரியில் படிப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது நான் தொடர்ந்து படிக்கத்தான் செய்வேன் என கூறிக் கொண்டு தனது அறைக்கு சென்று உள்ளே பூட்டி கொண்டார்.

நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கணவன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோது அங்கு ஷோபியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து
சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி மூன்று மாதங்களே ஆவதால் இளம்பெண் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடைய திருப்பூர் அரசு மருத்துவமனையில் குவித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் பெண்ணின் கணவர் விட்டார் மருத்துவமனைக்கு வரவில்லை எனவும் அவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய விசாரணை செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

திருப்பூரில் திருமணம் ஆகி 3 மாதத்தில் குழந்தையா கல்லூரியா என்ற குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
மதுஅருந்திவிட்டு பைக்கில் சென்ற இளைஞரை தாக்கியதாக புகார்

மதுஅருந்திவிட்டு பைக்கில் சென்ற இளைஞரை தாக்கியதாக புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
9 hrs 46 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved