கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், 800 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாரயத்தை கொட்டி அழித்தனர். மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி உத்தரவின்படி, நடத்தப்பட்ட சோதனையில் கள்ளச்சாராய ஊறல்கள் சிக்கிய நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.