கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பருவம் தப்பி தொடங்கிய பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை, விவசாயிகள் டிராக்டரை கொண்டு அழித்தனர். மங்களூர் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். பயிர்கள் வேரூன்றி வளரும் தருவாயில், பருவ மழையானது முன்கூட்டியே தொடங்கியதால், அதன் வளர்ச்சி குன்றி, பயிர்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இழப்பீடு கேட்டு காத்திருந்த விவசாயிகள், மாற்று பயிர் செய்வதற்காக தற்போது டிராக்டர் மூலம் தாங்கள் வளர்த்த பயிரினை, தானே அழித்து வருகின்றனர். கடந்தாண்டு, மக்காச்சோள பயிருக்கு காப்பீட்டு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு தற்போது வரையிலும் இழப்பீடு கிடைக்கப் பெறவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்நிலையில், வேளாண் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து, தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.