news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடிமை அதிமுக, ஆணவ பாஜக என முதல்வர் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

அடிமை அதிமுக, ஆணவ பாஜக என முதல்வர் விமர்சனம்

"பாஜகவின் பாதமே சரணாகதி"

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தன்னை தானே புலனாய்வு புலி என நினைத்து கொள்வதாகவும்

பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை போல மணிக்கு ஒரு முறை தான் ஒரு மங்குனி என்று, எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக்கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

கரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறது. சாதிக்க நாங்கள் ரெடி. 10 ஆண்டு காலமாக உரிமைகளை அடகு வைத்த அதிமுக ஆட்சியை நாம் அகற்றி, 2021ல் ஆட்சி அமைத்தோம்.

எந்தவொரு மாநில அரசும் இந்தளவு சாதனை செய்ய முடியாது எனக் கூறும் அளவுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செய்து காட்டினோம்.

செந்தில்பாலாஜி இருப்பதால்...
செந்தில் பாலாஜி இருப்பதால் கரூரை பற்றி எனக்கு கவலையில்லை. செந்தில் பாலாஜியின் புகுந்த வீடுதான் கோவை. பிறந்த ஊரான கரூரை மறக்க மாட்டார். இந்த முறை கரூர், கோவை மட்டுமின்றி தமிழ்நாடே நம்வசம் தான்.

இபிஎஸ் மீது விமர்சனம்
அதிமுகவை உடைக்க நான் முயற்சித்ததாக அபாண்டமாக பேசுகிறார், அதிமுகவின் அழிவு சக்தி பழனிசாமி. தலைமைப்பண்பு, அடக்கம் இல்லாமல், சொந்த கட்சியினரை துரத்திவிட்டு இப்படி வயிறு எரிந்து பேசுகிறார்.

தடம் மாறி கூட்டணி வைத்துள்ள பழனிசாமி செய்துள்ள துரோகங்களை எண்ணிப் பாருங்கள். திராவிட இயக்க கொள்கையில் இருந்து அதிமுக விலகுவதால் தான், தாய் கழகமான திமுகவுக்கு திரும்புகிறார்கள். நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்தார்.

திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை மொத்த அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி சசிகலா வரை துரோகம் செய்து முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Link
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - முதல்வர் விமர்சனம்

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - முதல்வர் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக, பாஜகவை நம்ப வேண்டாம் - விஜய் பிரச்சாரம்

2
5 mins agoshare
vijay speech in trichybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved