news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு தாக்கல்
tv

Also Watch

tv

Read this

துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு தாக்கல்

2ஆவது முறையாக போட்டி

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் அதிகாரியிடம் இன்று ஏப்ரல் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. வருகிற 6ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். அன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

2ஆவது முறையாக...
இந்நிலையில், திமுக சார்பில் 2ஆவது முறையாக, சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் . சேப்பாக்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

மீண்டும் உதயநிதி ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப்பட்டியலில் 19ஆவதாக இடம் பெற்றுள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களை உள்ளடக்கியது. இந்த தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் உதயநிதி போட்டியிடுகிறார்.

அதிமுக - ஆதி ராஜாராம்
நாதக - ஆயிஷா பேகம்
தவெக - டி.செல்வம் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இந்த தொகுதியில் 79 ஆயிரத்து 412 ஆண்கள், 84 ஆயிரத்து 396 பெண்கள், 58 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 63,866 வாக்காளர்கள் உள்ளனர்.

Related Link
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல்

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்

7
57 mins agoshare
யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved