news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல்
tv

Also Watch

tv

Read this

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல்

பேரணி வந்த விஜய்

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய், மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், இன்று ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார்.

அனல் பறக்கும் தேர்தல் களம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல்நாளே முதல்வர் வேட்பாளர்களான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், சீமான் காரைக்குடி தொகுதியிலும், விஜய் பெரம்பூர் தொகுதியிலும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

விஜய் வேட்பு மனு தாக்கல்
இந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி மரக்கடை த.வெ.கவுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்புமனு தாக்கல் மற்றும் பிரச்சாரத்திற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்த த.வெ.க தலைவர் விஜய், திருச்சி விமான நிலையத்தில் இருந்து தேர்தல் பிரச்சார வாகனத்தில் ரோடு ஷோ வந்தார்.

அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2ஆவது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் தவெக தலைவர் விஜய் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்து உள்ளார்.

Related Link
ஓடிச்சென்று நலம் விசாரித்த விஜய்

ஓடிச்சென்று நலம் விசாரித்த விஜய்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி

0
17 mins agoshare
அமித்ஷா பங்கேற்று நடனம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved