news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு
tv

Also Watch

tv

Read this

ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

பாகிஸ்தான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan

சவுதிக்கு 8,000 வீரர்களுடன் போர்விமானப் படையை அனுப்பிய பாகிஸ்தான் :

சவுதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், 8,000 வீரர்கள், ஒரு போர் விமானப் படைப்பிரிவு மற்றும் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை அந்நாட்டிற்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.

ஈரான் - அமெரிக்க போரில் முக்கிய மத்தியஸ்த நாடாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான், அதே வேளையில் சவுதி அரேபியாவுடனான இராணுவ ஒத்துழைப்பையும் மேம்படுத்தி வருகிறது.

ஈரான் மீதான ராணுவ தாக்குதல் நிறுத்தி வைப்பு :

கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக ஈரான் மீதான ராணுவ தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும் ஈரான் மீதான தாக்குதலுக்கு எப்பொழுதும் தயாராக இருக்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரூத் வலைதள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் போரால் உயர்ந்த எரிபொருள் விலை :

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசலுக்காக அந்நாட்டு மக்கள் கடந்த மூன்று மாதங்களில் இந்திய மதிப்பில் சுமார் 3.4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்திய மதிப்பில் சுமார் 26 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் எண்ணெய் மீதான வரிக்கு தற்காலிக விலக்கு? 

ஈரான் எண்ணெய் மீதான வரிக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை எட்டும் வரை எண்ணெய் மீதான வரி விலக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஈரான் மீதான மற்ற தடைகளையும் நீக்க அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க ஈரான் முன் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கவுதம் அதானி மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி  :

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளையும் மீண்டும் திறக்க முடியாத படி நிரந்தரமாக தள்ளுபடி செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இந்த விபரங்களை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்துக் கடன் திரட்டியதாகவும் கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Link
எபோலா வைரஸ் பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

எபோலா வைரஸ் பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி

0
1 hr 2 mins agoshare
அமித்ஷா பங்கேற்று நடனம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved