news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews 'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி

ஜக்தல்பூர், சத்தீஸ்கர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமித்ஷா பங்கேற்று நடனம்

மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று நடனம் :

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற பழங்குடி மக்களின் 'பஸ்தர் கே சங்'(( 'Bastar Ke Sang')) எனும் நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். பஸ்தர்((Bastar )) பகுதி பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்தும், கால்களில் குச்சியை கட்டிக் கொண்டும் நடனமாடினார்.

கேரள முதலமைச்சராக பதவியேற்றார் V.D.சதீசன் :

10 ஆண்டுகளுக்குப் பின் கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில், மூத்த தலைவர் V.D.சதீசன் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

நிகழ்ச்சியில் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

பெண்களுக்கு ரூ.3,000 நிதியுதவி மற்றும் இலவச பஸ் பயணம் :

மேற்கு வங்கத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், மதம் சார்ந்த திட்டங்களை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதியின்படி, மாநிலத்தில் உள்ள தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் டெல்லி முதல்வர் ரேகா:

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தமது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு மக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம்
செய்து வருகிறார். முன்னதாக டெல்லியில் அரசு ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் 2 நாட்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டிருந்தார்.

அமைச்சருக்கு எதிராக வீதிகளில் இறங்கி சாலை மறியல் :

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் நியமன முறை கேட்டால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை மாநில அரசு தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டனர்.

அப்போது சிலர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் தவழ்ந்த படி அமைச்சரின் வீட்டை சென்றடைந்தனர்.

Related Link
எபோலா வைரஸ் பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

எபோலா வைரஸ் பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி

0
1 hr 34 mins agoshare
அமித்ஷா பங்கேற்று நடனம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved