news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இன்றைய சினிமா நிகழ்வுகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய சினிமா நிகழ்வுகள்

Ken karunas

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

"கேஜிஎஃப்" இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய திரைப்படம் :

நடிகர் ஜூனியர் என்டிஆருடனான திரைப்படத்திலிருந்து நடிகர் டொவினோ தாமஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப், சலார் திரைப்படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் டொவினோ தாமஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த சூழலில், படப்பிடிப்பு தேதி நெருக்கடி காரணமாக இந்த படத்திலிருந்து அவர் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரிவேட்டை திரைப்படத்தை தொடர்ந்து "பள்ளிச்சட்டாம்பி" என்கிற படத்தில் டொவினோ தாமஸ் நடித்து முடித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான கென் கருணாஸ் "ஓபன் டாக்" :

"யூத்" திரைப்படம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளதாக இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் கென் கருணாஸ் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அவர், தாம் மிகவும் ஆசைப்பட்ட ஒரு விஷயம் உண்மையாக நடத்திருப்பதில் மகிழ்ச்சி எனவும், தனது தாய் தந்தைக்காகவே யூத் திரைப்படத்தை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த திரைப்படம் தொடர்பான அனைத்து விமர்சனங்களையும் தாம் படித்ததாகவும், அடுத்து வரும் படங்களில் அவற்றை எல்லாம் மாற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

முதல் முறையாக சல்மான் கானுடன் இணையும் நயன்தாரா :

பிரபல நடிகை நயன்தாரா, முதல் முறையாக பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார். வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி, சல்மான்கானை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

"தில்" ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் இது ஒரு பேன் இந்தியா ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவின் 51வது படம் குறித்து புதிய அப்டேட் :

சிம்புவின் 51வது படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெறுவார்கள் என கூறப்பட்டு வரும் நிலையில் மீனாட்சி சவுத்ரி உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நடிகைகள் ருக்மணி வசந்த், மிருளாள் தாகூருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Link
கோலிவுட் நியூஸ் தமிழ்

கோலிவுட் நியூஸ் தமிழ்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினிமா நிகழ்வுகள்

1
6 hrs 40 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved