Also Watch
Read this
திருச்சியில், ரோடுஷோ சென்ற தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்தபோது தவறி கீழே விழுந்த இளைஞர் மற்றும் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, வாகனத்தை நிறுத்தி இறங்கிச்சென்று அவர்களை விஜய் ஆசுவாசப்படுத்தினார்.

தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பு
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதும் என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு
ஏற்கனவே பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், இன்று ஏப்ரல்2ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தார். திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கொண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து திறந்த பரப்புரை வாகனத்தில் நின்றபடி, தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ சென்றார். அவரை பின்தொடர்ந்து, தவெக தொண்டர்கள் சென்றனர்.

தேர்தல் பிரச்சார வாகனத்தில்...
தவெக தலைவர் விஜய் வாகனத்தை யாரும் பின் தொடராமல் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் சட்டம் ஒழுங்கை பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிரச்சார வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்றும் தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கூடிய பொது மக்கள் கூட்டம்
ஆனால், திருச்சியில் விஜய் பரப்புரை செய்யும் பகுதியில் பெண்கள் அதிக அளவில் குழந்தைகளோடு வந்தனர். திருச்சி கிழக்கு தொகுதிக்காக, வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும்போது விஜய் பிரச்சார வாகனத்தை தொண்டர்கள் பைக்கில் பின்தொடர்ந்தனர். தவெக தலைவர் விஜய் சாலை வலம் செல்வதால் திருச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனத்தில் இருந்து திடீரென இறங்கிய விஜய்
இந்த சூழலில் சாலையில் விஜய் ரோடு ஷோ சென்று கொண்டிருந்த போது விஜயை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் சென்றபோது இளைஞர் மற்றும் பெண் ஒருவர் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதனை பார்த்த விஜய் உடனே திடீரென வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். சாலையில் இறங்கி சென்று நலம் விசாரித்தார். பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வாகனத்தில் ஏறி மீண்டும் தவெக தலைவர் விஜய் சாலை வலம் வந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved