news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இனிய சகோதரர் செந்தில்பாலாஜி - முதல்வர் ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

இனிய சகோதரர் செந்தில்பாலாஜி - முதல்வர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூர் மாவட்டத்தின் வெற்றியை உறுதி செய்ததால் தான் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பியதாக பாராட்டி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சரின் பேச்சுக்கு பதிலடி தந்துள்ள இபிஎஸ், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில்பாலாஜியை என்னவெல்லாம் பேசினார் என்பதை தெரிந்து வைத்திருக்கும் மக்கள், தேர்தலில் திமுகவுக்கு ஆப்படிக்க உள்ளதாக விமர்சித்தார்.



கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
கரூரை பொறுத்தவரை எனக்கு எந்த கவலையும் இல்லை. எனது இனிய சகோதரர் செந்தில் பாலாஜியின் கோட்டை இது. கரூர் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி 100% உறுதி ஆகி உள்ளது. கரூர் வெற்றியை உறுதி செய்ததால் கோவைக்கு செந்தில்பாலாஜியை அனுப்பினேன். யாரும் கவலைப்பட வேண்டாம். கோவை புகுந்த வீடு, சோதனைகளை தாண்டி சாதனை படைப்பவர் செந்தில்பாலாஜி.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டையில் இபிஎஸ் பேசியதாவது;
கரூரில், மக்கள் திமுகவுக்கு ஆப்பு வைக்க போகிறார்கள். செந்தில்பாலாஜி இருப்பதால் வெற்றி பற்றி கவலையில்லை என முதல்வர் பேசி உள்ளார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில்பாலாஜியை விமர்சித்தார். செந்தில்பாலாஜி குறித்து எவ்வளவு கடுமையாக அவதூறு பேசினார். அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என பச்சோந்தி போல் இருக்கிறார். அதிமுகவில் இருக்கும் போது செந்தில்பாலாஜி திமுகவை எப்படி விமர்சித்தார். ரூ.10 விஷயத்தில் ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்தவர் செந்தில்பாலாஜி
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Related Link
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - முதல்வர் விமர்சனம்

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - முதல்வர் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார்

0
0 min agoshare
தண்ணீரில் சிக்கிய கார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved