news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
tv

Also Watch

tv

Read this

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

பெரிச்சிபாளையம், திருப்பூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பொதுமக்கள் தர்ணா போராட்டம்

பொதுமக்கள் தர்ணா போராட்டம் :

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மாநகராட்சி கழிப்பறைக்கு பின்புறம் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் புகைமண்டலம் உருவாகி பொதுமக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், இப்பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நாச்சியார் பள்ளி அருகே மதுபானக் கடை அமைந்துள்ளது. இங்கு வரும் மதுப்பிரியர்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர்.


எனவே, குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதைத் தடுத்து, பள்ளி அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர்

இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
செய்யாத பணிக்கு ரூ.15.80 லட்சத்திற்கான காசோலை

செய்யாத பணிக்கு ரூ.15.80 லட்சத்திற்கான காசோலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் பி.வி.சிந்து - இந்தோனேசிய வீராங்கனை மோதல்

0
8 mins agoshare
பி.வி.சிந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved