news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews செய்யாத பணிக்கு ரூ.15.80 லட்சத்திற்கான காசோலை
tv

Also Watch

tv

Read this

செய்யாத பணிக்கு ரூ.15.80 லட்சத்திற்கான காசோலை

காரைக்குடி, சிவகங்கை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாநகராட்சி ஆணையர் நிர்பந்தம்

முறைகேடு புகார்கள் :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் கடந்த 2025 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் தேதி துணை மேயர் அறை மற்றும் மாமன்ற கூட்ட அறையில் மேயர்
இருக்கை, துணை மேயர் இருக்கை.

ஆணையாளர் இருக்கை வசதி மற்றும் மாமரத்து பணி செய்ய வேண்டி ரூ.18,00,000 மதிப்பீட்டில் ஒப்பந்த நடவடிக்கை அறிவிக்கை வெளியிடப்பட்டது. இணையவழியில் விண்ணப்பித்த படி பிரத்திவி அன்கோ உரிமையாளர் பாண்டி என்பவர் குறைவான ஒப்பந்த புள்ளி அளித்ததால் அவருக்கு ஒப்பந்த பணி ஒதுக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த 6.2.2025 அன்று மாமன்ற கூட்ட தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு மேயர், துணைமேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆதரவளித்தனர்.
ஆனால் அதன்பிறகு எந்த பணி என்பது குறித்து மேற்கண்ட ஒப்பந்ததாருக்கு உத்தரவும் வழங்கப்படவில்லை.

பலமுறை காரைக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளரை தொடர்பு கொண்டும் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலையில் கடந்த ஏப்ரல்
29 ஆம் தேதி மாநகராட்சி ஆணையர் சங்கரன்.

பாண்டியை அழைத்து மேற்படி வேலைகளை ஆணையர் மற்றும் பொறியாளர் துணை மேயர் உதவி பொறியாளர்கள் தாங்களாகவே வேறு ஒரு நபரை விட்டு அனைத்து பணிகளையும் முடித்து விட்டதாகவும்.

எனவே செலவு ரூ.15,80,000 செய்யாத பணிக்கு நீங்கள் செய்ததாக ஒப்புக்கொண்டு காசோலையை பெற்று கொண்டு வங்கியிலிருந்து பணத்தை எடுத்து தங்களிடம் கொடுத்தால் நீங்கள் ஏற்கனவே பார்த்த ஒப்பந்த பணிக்காண காசோலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மிரட்டியுள்ளனர்.

இதனால் கடந்த மாதம் 29ஆம் தேதி காசோலை மட்டும் பெற்றுக் கொண்டார். வேலையே செய்யாமல் செய்ததாக கணக்கு காட்டி, பணத்தை அவர்கள் கணக்கிற்கு வரவு வைக்க சொல்லி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி.

ஒப்பந்ததாரர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேயர் துணை மேயர் மீது முறைகேடு புகார்கள் ஆதாரத்துடன் அம்பலத்தை படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இவர்கள் மீது தமிழக அரசின் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

Related Link
சிமெண்ட் தூண்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

சிமெண்ட் தூண்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

80 வயது மூதாட்டிக்கு பா*யல் துன்புறுத்தல்

0
8 mins agoshare
மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved