Also Watch
Read this
Posted on: Dec 09, 2024 12:51 PM
By: Srini Vasan

தேனி மாவட்டம் சூலப்புரம் கிராமத்திற்கு முதல்முறையாக பேருந்து வசதி தொடங்கப்பட்ட நிலையில், கிராம மக்கள் உறுமி மேளம் அடித்தும், நாட்டுப்புற நடனமாடியும் உற்சாக வரவேற்பளித்தனர்.
போடிநாயக்கனூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூலப்புரம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி,
கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் சிலமலை கிராமம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்கிருந்து பிற பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காலை, மாலை என 2 வேளை பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே காலை 8:30 மணிக்கு வரவேண்டிய பேருந்து 8:55 மணிக்கு வந்ததால் மாணவ மாணவிகள் பதட்டத்திற்கு உள்ளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved