Also Watch
Read this
By: Manigandan Raja

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை :
ஈரோடு மாவட்டம், ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், 48. தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியான இவர் இவருடன் பணியாற்றும் நசியனூரை சேர்ந்த சுரேஷ், 47, என்பவரும் வேலை முடிந்து, சுரேஷ்க்கு சொந்தமான ஹோண்டா டியோ டூவீலரில், சுரேஷ் ஓட்ட, ஜெயகுமார் பின்னால் உட்கார்ந்து கொண்டு.
நேற்று முன்தினம் மாலை குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பேருந்து நிறுத்தத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடிக்க நின்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, இவர்கள் மீது வேகமாக மோதியதுடன் சாலையோரமாக நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.
இக் காட்சியினை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் வாகனத்தை துரத்தி சென்று தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்தில் சரக்கு வேன் மோதியதில் சம்பவ இடத்தில் ஜெயக்குமார் உயிர் இழந்தார்.
சுரேஷ் பலத்த அடிபட்ட நிலையில் ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர், அருவங்காடு பகுதியயை சேர்ந்த ஓட்டுனர் சந்திரபோஸ், 49, என்பவரை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved