Also Watch
Read this
By: Manigandan Raja
மது போதையில் வீட்டிற்கு வந்த கூலித்தொழிலாளி. தலைக்கேறிய போதையில் மனைவியையும், மருமகளையும் வாய்க்கு வந்தபடி பேசி அடாவடி. தாயையும், மனைவியையும் ஆபாசமாக திட்டியதைக் கேட்டு கொதித்தெழுந்த மகன். அடுத்த சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம். நடந்தது என்ன?
தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறிய மகன்
இரவு தூங்கப் போகும்போது, அமைதியா இருந்த பக்கத்து வீட்டுல, காலையில ஒரே சத்தமா கேட்டுருக்கு. அதுமட்டுமில்ல, அந்த வீட்டு முன்னாடி சடலத்த வைக்கிற ஃப்ரீசர் பாக்ஸ் ஒன்னும் இருந்துருக்கு. என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ, பக்கத்து வீட்டுல இருந்த கூலி தொழிலாளி சக்திவேல் திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துட்டதாவும், அவருக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடு நடந்துட்டு இருக்குறதாவும் அங்க உள்ளவங்க சொல்லிருக்காங்க. நடுராத்திரில இறந்து போனவருக்கு எதுக்கு இவ்வளவு வேக வேகமா இறுதிச்சடங்கு பண்றாங்கன்னு, அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கு சந்தேகம் வந்துருக்கு. அதுமட்டுமில்லாம, உயிரிழந்தவரோட கழுத்து பகுதில காயங்கள் இருந்தத பாத்தவங்க, போலீஸுக்கு ஃபோன் பண்ணி இன்பார்ம் பண்ணிருக்காங்க.

போலீசார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
அடுத்து கொஞ்ச நேரத்துலே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், அங்க இருந்தவங்ககிட்ட சக்திவேல் எப்படி உயிரிழந்தாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்ப, அவரோட மகனும், சக்திவேலோட மனைவியும் போலீஸ்காரங்களோட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம திணறிருக்காங்க. அத நோட் பண்ண காவலர்கள் சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சிட்டு விசாரணையில இறங்குனாங்க. அதுலதான், நைட்டோட நைட்டா நடந்த அந்த கொடூர சம்பவம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துச்சு.
வீட்டிற்கு வந்த மருமகளையும் அவதூறாக பேசியதால் ஆத்திரம்
தருமபுரி நல்லம்பள்ளில உள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்த சேர்ந்தவர் சக்திவேல். கூலிதொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துருக்குது. தெனமும் வீட்டுக்கு குடிச்சிட்டு வந்து மனைவியையும், மகனையும் தகாத வார்த்தையால திட்டுறதையே வழக்கமா வச்சிருந்துருக்காரு. இதுக்கு இடையில, மகன் திருப்பதிக்குக்கும், அவரோட சொந்தக்கார பொண்ணுக்கும் கல்யாணமாகிருக்குது. அதுவரைக்கும் மனைவியையும், மகனையும் மட்டும் தகாத வார்த்தையால பேசி திட்டிட்டு இருந்தவரு, மருமகளையும் சேத்து அவதூறா பேசியிருக்காரு சக்திவேல்.
சக்திவேலுக்கும், திருப்பதிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு
உறவினர்களிடம் நாடகமாடிய மகன் திருப்பதி
ஆத்திரத்துல தந்தைய கொன்னுட்டோமேன்னு பதறுன திருப்பதி, இந்த கொலைய மறைக்க திட்டம் போட்ருக்காரு. மகன் போலீஸ்ல சிக்கிடக்கூடாது அப்டிங்குறதுக்காக திருப்பதி போட்ட பிளானுக்கு, தாயும் உடந்தையா இருந்துருக்காங்க. நைட்டு போதையில கட்டில் மேல தூங்கிட்டு இருந்த சக்திவேல், தடுமாறி கீழ விழுந்ததால திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துட்டாருன்னு சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்துல உள்ளவங்கிட்டையும் சொல்லி நம்ப வச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம, அவசர அவசரமா இறுதி சடங்குகளும் பண்ணி கொலையில இருந்து தப்பிக்க பிளான் போட்டுருக்காங்க.
திருப்பதியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
விசாரணையில சக்திவேல் இயற்கையா மரணமடையல அவரோட பையன் திருப்பதி தான் கொலை பண்ணிருக்காரு அப்டிங்குறத உறுதிப்படுத்துன போலீஸ், அவன் மேல கொலை வழக்குப்பதிவு பண்ணி சிறையில தள்ளிருக்காங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved