ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாக வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாநகராட்சிக்கு பல ஆயிரங்களை வாடகையாக செலுத்தி கடை அமைத்து வியாபாரம் செய்து வரும் நிலையில், சாலையோர வியாபாரிகளால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகரின் பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : கைது செய்ய சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்