news-tamil-logo

3/19/2026, 11:24:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்
tv

Also Watch

tv

Read this

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

அண்ணா அறிவாலயம், சென்னை

Posted on: Mar 19, 2026 08:25 AM

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி, மனு அளித்தோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக நேர்காணல் நடத்தினார். கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட திமுகவினரிடம் நேர்காணல் நடைபெற்றது.

ஏப்ரல்-23ல் தேர்தல்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி விட்டது. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி, பிரச்சார பொதுக்கூட்டம் என்று, அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது. தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறது.

நேர்காணல் தொடங்கியது
பரபரப்பான தேர்தல் களத்தில், திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 17ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்றது. முதல்நாளில், புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. திமுகவில், வேட்பாளர்களாக போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். வருகிற 22 ஆம் தேதி வரை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென் மாவட்ட தொகுதிகளுக்கு...
திமுகவில் தென் மாவட்டங்களுக்கான நேர்காணல் மார்ச் 18ஆம் தேதி நடைபெற்றது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கேட்டறிந்து வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள நிலையில், நேர்காணலில் ஓ.பி.எஸ். பங்கேற்றார்.

இன்று மார்ச் 19ஆம் தேதி
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி, மனு அளித்தோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக, நேர்காணல் நடத்தினார். கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட திமுகவினர் நேர்காணலில் பங்கேற்றனர்.

நேர்காணல் முழு விவரம்

* மார்ச் 20ஆம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை
பிற்பகல் - தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி

* மார்ச் 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்
பிற்பகல் - புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்

* மார்ச் 22 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

நேர்காணலுக்கு பிறகு, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
தங்கம் விலை குறைந்தது, மக்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை குறைந்தது, மக்கள் மகிழ்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
8 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved