Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 09:04 AM
திமுக கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நீடிக்கிறது.
2ஆவது கட்ட பேச்சு
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க திமுக தலைமை திட்டமிட்டு உள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன், திமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தொகுதி பங்கீட்டு குழுவினர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து, பேச்சுவார்த்தையை தொடங்கினர். இது மக்கள் நீதி மய்யத்துடன் நடக்கும் 2வது கட்ட பேச்சுவார்த்தை.
திமுக வைத்த கோரிக்கை
பேச்சுவார்த்தைக்கு பிறகு, மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறியதாவது;
தொகுதி எண்ணிக்கையில் பிரச்னை இல்லை. அது சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாகவே சென்றது. ஆனால், திமுக எங்களை உதய சூரியன் சின்னத்தில் நிற்க கோரிக்கை வைக்கிறது. கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு, சராசரியாக 4% வாக்குகளை வாங்கி உள்ளோம். தொண்டர்கள் மற்றும் மக்களிடம் சென்று சேர்ந்த சின்னம் டார்ச் லைட் சின்னம். அதில், போட்டியிட வேண்டும் என்றே உறுதியாக இருக்கிறோம்.
மநீம திட்டவட்டம்
சின்னம் குறித்து தான் இரு தரப்புக்கும் மாற்று கருத்து உள்ளது. தலைவரிடம் விஷயத்தை கூறுவோம். செயற்குழு கூடி முடிவெடுப்போம். இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் சந்திக்கிறோம்.
இவ்வாறு அருணாச்சலம் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved