விழுப்புரத்தை அடுத்த பிடாகம் குச்சிபாளையத்தில் கைது செய்ய வந்த உதவி காவல் ஆய்வாளரை ஸ்க்ரூ டிரைவரால் தாக்கிவிட்டு தப்பியோடிய மணல் கடத்தல் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் உதவி ஆய்வாளர் குணசேகரன் மணல் கடத்தலில் தொடர்புடைய சுதாகரை கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றபோது, ஸ்க்ரூ டிரைவரால் தாடை மற்றும் கழுத்து பகுதியில் தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை, உடன் சென்ற சக போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.