news-tamil-logo

3/19/2026, 11:22:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home news குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு
tv

Also Watch

tv

Read this

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

Posted on: Mar 19, 2026 08:39 AM

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசே கூறியுள்ள திமுக அரசின் சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக என்றும் பதிவிட்டு உள்ளார்.

நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக...
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலை தள பதிவு;
ஜவுளி ஏற்றுமதி, திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி. குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
2020 - 2021ஆம் ஆண்டில் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில், 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது.

சாதனைகளைச் சொல்லி வெல்வோம்
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%. இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, ஒன்றிய அரசு. சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Link
திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
6 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved