Also Watch
Read this
By: Manigandan Raja

ஓய்வெடுத்த புலியின் வீடியோ :
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் கடந்த இரண்டு நாட்களாக புலி நடமாடி வருகிறது இதனால் வாகன ஓட்டுகள்
கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பகல் நேரங்களிலேயே சாலையை கடந்து செல்லும் போது வனப்பகுதிக்குள் ஓய்வெடுப்பதையும் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டிகள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சுற்றுலா பயணிகள் சபாரி செல்லும்போது சாலை ஓரம் வனப்பகுதிக்குள் அமர்ந்தவாறு கம்பீரமாக புலி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
இதனை கண்ட சுற்றுலா பயணிகள் வியப்படைந்து புலியை வீடியோ பதிவு செய்தனர் சிறிது நேரம் அமர்ந்திருந்த புலி வாகனத்தை கண்டதும் மெதுவாக எழுந்து வனப்பகுதிக்கு சென்றது இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாயார் சாலையில் புலி நடமாட்டம் காணப்படுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் நிறுத்தக்கூடாது எனவும் சபாரி செல்லும் சுற்றுலா பயணிகள் இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved