வேலூர் சிறையில் தாக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியிடம் 6 பேர் கொண்ட சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி, வீடியோ பதிவு செய்தது.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சிவகுமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.சிறைத்துறை டிஐஜி வீட்டிற்கு வேலைக்கு சென்ற சிவக்குமார் 4 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி தாக்கப்பட்டதாக அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிறைத்துறை டி.ஐ.ஜி. உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் சிபிசிஐடி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வேலூர் சிறையில் இருந்த சிவக்குமாரை சேலம் மத்திய சிறைக்கு மாற்றியது.