திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் CBCID போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அலமேலு அம்மாள் மற்றும் செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த எட்டு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.