கும்பகோணம் மடத்துத்தெருவில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் பிரதிஷ்டை விழாவில், பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச் ராஜா மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துடன் பங்கேற்ற நடிகை கஸ்தூரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கேரள மாநிலத்தில் திரைப்படத்துறையில் பெரும் பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி போல, தமிழகத்திலும் அதுபோல கமிட்டி தமிழகத்தில் அமைப்பது குறித்து கேள்விக்கு, இதனை யார் கேட்டுள்ளார் என பதில் கேள்வி எழுப்பி, அதற்கு இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ராதிகா போன்றோர் பேசியுள்ளார்களே என்றதற்கு, அவர்கள் சீனியர்கள் அவர்கள் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார், மீண்டும் செய்தியாளர்கள் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்ப முயன்ற போது, அது தவிர்த்த வேறு கேள்விகள் உள்ளதா ? என இது குறித்த கேள்விகளை தவிர்த்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்