நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற WEDNESDAY சீரிஸின் 2ஆம் பாகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது.காமெடி, திரில்லர் வகை சீரிஸான WEDNESDAY 2ஆம் பாகம் உருவாகி வருகிறது.