Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 12:45 PM
By: Manigandan Raja

நடிகர் சூரி :
"மைத்ரி தமிழ் 03" என்கிற புதிய திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் மிரட்டும் தொனியில் வெளியாகி உள்ளது. இடுப்பளவு தண்ணீரில், கையில் ஆயுதத்துடன் கதாநாயகன் நிற்பது போன்ற போஸ்டரில், உடைந்த பாத்திரங்கள், பொருட்கள் மற்றும் கவிழ்ந்து கிடக்கும் சிலிண்டர் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள "BLOOD FOLLOWED THE FLOOD" என்ற டேக்லைன், வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்குகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved