Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 02:49 PM
By: Manigandan Raja

வார்னே புத்திசாலி என ரசிகர்கள் புகழாரம் :
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை செய்யப்பட்டதன் மூலம், அந்த அணியின் முன்னாள் கேப்டனான மறைந்த ஷேன் வார்னேவுக்கு 460 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்காக 4 சீசன்கள் விளையாடிய ஷேன் வார்னே வெறும் 9 கோடியே 35 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார்.
அது போக ஒவ்வொரு ஆண்டும் அணியின் பங்குகளில் 0.75% பங்கு அவருக்கு கொடுக்கவேண்டும் என்று நிர்வாகத்திடம் ஷேன் வார்னே ஒப்பந்தம் செய்திருந்தார். அதன்பிறகு 4 சீசன்களில் விளையாடி மொத்தம் 3% பங்குகளை வார்னே வைத்திருந்தார். தற்போது ராஜஸ்தான் அணி விற்கப்பட்டதன் மூலம் அவரது 3% பங்குகளுக்கான தொகையாக 460 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved