news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி

கேகேஆர் பிளேஆஃப் கனவு கேள்விக்குறி

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி

40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி அணியால், புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

முக்கியமான போட்டி
ஐபிஎல் 2026 தொடரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி அசத்தி உள்ளது. இந்த தோல்வியால் கேகேஆர் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மிகுந்த சிக்கலில் சிக்கியுள்ளது.

டெல்லி Vs கேகேஆர்
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. டெல்லி அணிக்காக கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். அக்சர் பட்டேல் 25 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். டேவிட் மில்லர் 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். கேகேஆர் தரப்பில் சௌரப் துபே 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

கடின இலக்குடன்...
204 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. அணித்தலைவர் அஜிங்க்ய ரஹானே மட்டும் 39 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து போராடினார். ரோவ்மன் பவல் 29 ரன்கள், மணிஷ் பாண்டே 25 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

டெல்லி அணி வெற்றி
18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கேகேஆர் அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் டெல்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் 13 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ள கேகேஆர் அணியின் பிளேஆஃப் கனவு தற்போது மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Link
IPL 2026: ஹைதராபாத் அதிரடி வெற்றி RCB-க்கு கனத்த பின்னடைவு!

IPL 2026: ஹைதராபாத் அதிரடி வெற்றி RCB-க்கு கனத்த பின்னடைவு!

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

4
21 mins agoshare
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved