news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிவுநீர் சேகரிப்பு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

கழிவுநீர் சேகரிப்பு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரியலூர், ஜெயங்கொண்டம்

Posted on: Mar 25, 2026 04:05 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
JAYANKONDAM

கழிவுநீர் சேகரிப்பு வாகனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்  :

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தனிநபர் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் வகையில் அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்த வாகனங்களின் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் ஆங்காங்கே மக்கள் பயன்படுத்தி வரும் பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டிமடம் செல்லும் மெயின் ரோட்டில்
செப்டிக் டேங்க் கழிவுநீரை சாலையின் ஓரத்தில் மக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தில் கழிவுநீரை திறந்து விட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கழிவுநீர் வாகன ஓட்டி மற்றும் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்ததையடுத்து கழிவு நீர் வாகனத்தை எடுத்துச் சென்றனர் இவ்வாறு சாலையின் ஓரங்களில் செப்டிக் டேங்க் கழிவுநீர் கொட்டப்படுவதால் சாலையை பயன்படுத்தக்கூடிய பலதரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வீடுகளில் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை அகன்றும் கழிவு நீர் வாகனங்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீரை கொட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பொதுவெளியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் கழிவுநீரை திறந்து விடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Link
வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
1 hr 40 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved