Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு :
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். படகில் பயணித்தவாறு ஆய்வு மேற்கொண்ட அமித்ஷா, சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். அப்போது, குஜராத் மாநில முதலமைச்சர் புபேந்திர படேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கர்நாடக முதலமைச்சர் பதவியை துறந்த சித்தராமையா :
கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதையடுத்து ஆளுநரை நேரில் சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிராகரித்த சித்தராமையா :

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிராகரித்துள்ள சித்தராமையா, டிகே சிவக்குமாரை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய பொறுப்பு ஒன்றை குறிவைத்து காய்நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட, ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் சித்தராமையா முன்மொழிந்துள்ளார்.
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை :

கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீஷன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோதனை நடைபெற்ற பிறகு, ராகுல் காந்தி மீது பினராய் விஜயன் குற்றம் சாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா உதவி :

காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், ஆப்பிரிக்காவிற்கு மருத்துவ பொருட்களை அனுப்பி இந்தியா உதவி செய்துள்ளது. உகாண்டாவில் உள்ள இந்திய உயர் அதிகாரிகளிடம் மருத்துவ உதவிகள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved