news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இளம்பெண்ணிடம் பா*யல் அத்துமீறிலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்
tv

Also Watch

tv

Read this

இளம்பெண்ணிடம் பா*யல் அத்துமீறிலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்

தாம்பரம், சென்னை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலை மறியல்

திடீர் சாலை மறியல் : 

சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலை, சமத்துவ பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரிடம், வடமாநில தொழிலாளி ஒருவர் பாலியல் ரீதியாக மிகவும் தவறான முறையில் நடந்துகொண்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இளைஞர் ஒருவர் அத்துமீறியதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார் இது தெடர்பாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளான அந்த வடமாநில நபரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.


மாறாக, அவரிடமிருந்து வெறும் தொலைபேசி எண் மற்றும் ஒரு புகைப்படத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் மிகவும் அலட்சியமாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

​இதற்கிடையே, அந்த வடமாநில தொழிலாளியின் முதலாளி புகார் எதுவும் தெரிவிக்க வேண்டாம் சமாதானமாக போய்விடலாம் என பாதிக்கப்பட்டவர்களிடையே பேச்சுவார்த்தை
நடத்திவிட்டு

காவல் நிலையம் சென்று வடமாநில இளைஞரை அந்த பகுதியைச் சார்ந்த நபர்கள் தாக்கி விட்டதாக கூறி புகார் அளித்துள்ளார் ​அந்தப் புகாரைப் பெற்ற காவல்துறை, விடிய விடியக் காத்திருந்து, இன்று அதிகாலை 6 மணி அளவில் அப்பகுதியைச் சேர்ந்த 4 ஆண்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

​ ​தவறு செய்த வடமாநில நபரைத் தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நியாயம் கேட்ட 4 ஆண்களைக் கைது செய்த பீர்க்கன்காரணை காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரை அழைத்து தற்போது நடத்தி வருகின்றனர்.

Related Link
24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை

24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி

0
5 mins agoshare
பி.வி சிந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved