news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

tv

Read this

ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு, சேலம்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மலர் கண்காட்சி

மலர்கண்காட்சி  : 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு 49-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி கடந்த 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைக்கப்பட்டு 28.05.2026 வியாழக்கிழமை அன்று வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இக்கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.


பொதுமக்கள்,சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்காட்சி வரும் 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை
கூடுதலாக 3 நாட்களுக்கு நடைபெறும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் காலை முதல் ஆர்வத்துடன் மலர்கண்காட்சி திடலில் குவிந்து பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மலர் கண்காட்சி திடல் கலைக்கட்டி உள்ளது.

Related Link
உயர் மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் சேதம்

உயர் மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் சேதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

1
34 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved