Also Watch
Read this
By: Manigandan Raja

போலீசார் விசாரணை :
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் ஒன்றாம் தெருவில் அமைந்துள்ள கழிவு நீர் ஓடையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை அப்பகுதி
மக்கள் பார்த்தனர் இதனை அடுத்து சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் அப்போதுக்கி விரைந்து வந்து கழிவுநீர் ஓடையில் கிடந்த உடலை அப்பகுதியின் உதவியோடு மீட்டனர் அப்போது அவர் அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என தெரிய வந்தது இவர் இசைக் கலைஞர் (டிரம்ஸ்) தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கழிவு நீர் ஓடையில் மரணமடைந்த நிலையில் கிடந்தது கண்டு அப்போது மக்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இறந்த ரஞ்சித்தின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved