news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இன்றைய வெளிநாட்டு செய்திகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய வெளிநாட்டு செய்திகள்

டிரம்ப்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய வெளிநாட்டு செய்திகள்

"ஒட்டுமொத்த ஈரானையும் ஒரே நாள் இரவில் கைப்பற்றுவோம்" : 

ஒட்டுமொத்த ஈரானையும் ஒரே நாள் இரவில் கைப்பற்றுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓபனாக மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த இரவு செவ்வாய்க்கிழமை இரவாகக்கூட இருக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், 48 மணி நேரம் ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்க வீரரை மீட்டது மிகப்பெரிய சாதனை எனவும், அமெரிக்க ராணுவம் இதுவரை மேற்கொண்டதிலேயே மிகப்பெரிய, மிகவும் சிக்கலான மற்றும் பதற்றம் நிறைந்த தேடுதல் வேட்டை அது எனவும் வர்ணித்தார்.

ஒரு வீரரை மீட்க 200 வீரர்கள் அனுப்பப்படுவது என்பது எளிதில் முடியாத விஷயம் எனவும், வழக்கமாக யாரும் அவ்வளவு எளிதில் செய்ய துணிய மாட்டார்கள் எனவும், இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு எனவும் தெரிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஏவுகணை தாக்குதல் :

ஈரானின் பல்வேறு நகரங்கள் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர். தலைநகர் தெஹ்ரானில் பஹ்ரெஸ்தான் கவுண்டியில் உள்ள ஒரு குடியிருப்பு மீது கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 10 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளும், 2 சிறுவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஒரு பல்கலைக்கழகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் தடைபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எங்களுடைய வலிமையை எதிரிகள் பார்க்கப் போகிறார்கள்" :

பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தும் எதிரிளுக்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தும் விதமாக பதிலடி தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் ஹோர்முஸ் நீரிணையை திறந்து விட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஈரானுக்கு நரகத்தை காட்டுவோம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், ஈரான் பல்கலைக்கழகம் மீதும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. இதையடுத்து, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள ஈரான், தங்களுடைய வலிமையை ஆக்கிரமிப்பாளர்கள் பார்க்கப் போகிறார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு : 

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை விடுவிக்க வேண்டும் என, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு ஜென் ஸீ இளையோர் தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இளைஞர்கள் மீது ஒடுக்குமுறையை கையாண்டதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோர் கடந்த மார்ச் 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய திரைத்துறைச் செய்திகள்

0
19 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved