Also Watch
Read this
Posted on: May 08, 2025 10:06 AM
By: Srini Vasan

சிஸ்டைன் தேவாலய புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை எழுந்ததையடுத்து போப்பாண்டவர் மாநாட்டின் முதல் நாளில் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது தெரிந்தது.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் புதிய போப்பாண்டவர் தேர்வு குறித்த வெள்ளை புகை சமிக்ஞைக்காக ஆயிரக்கணக்கானோர் பல மணி நேரம் காத்திருந்த போது, புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேறியது.
இதன் மூலம் கார்டினல்கள் முதல் மாநாட்டு வாக்கெடுப்பில் போப்பை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அது தெரியபடுத்தியது. இதனை தொடர்ந்து 133 கார்டினல்களும் வியாழக்கிழமை மீண்டும் வாக்களித்து புதிய போப்பை தேர்ந்தெடுப்பர்.
மறைந்த போப் பிரான்சிஸைத் தேர்ந்தெடுத்த 2013 ஆம் ஆண்டு மாநாடு, இரண்டு நாட்கள் மட்டுமே நடந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved