அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பிரபல இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். நியூ ஜெர்சியில் உள்ள Teterboro விமான நிலையத்தில் இருந்து சான்டியாகோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான சிறிய ரக ஜெட் விமானம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே சாலை நடுவே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தின் எரிபொருள் சிதறி சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், சில வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. Sound Talent Group எனும் இசைக்குழுவின் நிறுவனர் டேவ் ஷபிரோ, டிரம்ஸ் கலைஞர் டேனியல் வில்லியம்ஸ், இசைக்குழு பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் பலியாகினர்.