news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைனுக்கு எதிராக 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்த ரஷ்யா
tv

Also Watch

tv

Read this

உக்ரைனுக்கு எதிராக 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்த ரஷ்யா

ரஷ்யா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்த ரஷ்யா :

ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனுக்கு எதிராக 2 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனும் 2 நாள் போர் நிறுத்ததை கடைபிடிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வராததால், அந்நாட்டு படைகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி தனது படைகளுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் தொடங்கும் :

ஈரானின் உதவியுடனோ அல்லது உதவியின்றியோ ஹார்முஸ் நீரிணை வழியாக மிக விரைவாக எண்ணெய் விநியோகம் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஹர்முஸ் நீரிணையில் ஈரானின் பங்கு குறித்த நிச்சயமற்ற தன்மை இருப்பினும், விநியோக சங்கிலியை மீட்டெடுப்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

ஹோர்முஸில் 15 கப்பல்களுக்கு மேல் செல்ல ஈரான் அனுமதிக்காது :

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாக, அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஒரு நாளைக்கு 15 கப்பல்களுக்கு மேல் செல்ல ஈரான் அனுமதிக்காது என்று ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

போருக்கு முன்பு, 'ஹோர்முஸ் நீரிணை' வழியாக, நாள்தோறும் சுமார் 140 கப்பல்கள் பயணித்து வந்தன.

இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தல் :

ஈரானுடன் ஒரு நிலையற்ற போர் நிறுத்தத்தை அமெரிக்கா தக்கவைக்க முயன்று வரும் நிலையில், லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்குமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

லெபனானில் குறிவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் என இஸ்ரேல் கூறினாலும், உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஈரான் உச்சத் தலைவர் அலி காமேனியின் 40வது நாள் நினைவு தினம் : 

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவம் நடத்திய கூட்டு தாக்குதலில், அந்நாட்டின் உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டு 40 நாட்கள் கடந்த நிலையில், அதற்கான நினைவு நிகழ்ச்சி தெஹ்ரானில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Related Link
ஈரானின் 10 அம்ச திட்டம் 'ChatGPT' மூலம் எழுதப்பட்டதா?

ஈரானின் 10 அம்ச திட்டம் 'ChatGPT' மூலம் எழுதப்பட்டதா?





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
56 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved