சந்திரனும் செவ்வாயும் மிக நெருக்கமாக காட்சியளிக்கும் வானியல் நிகழ்வை வரும் 30 ஆம் தேதி காணலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாலை நேரத்தில் வானம் தெளிவாக இருந்தால் வளர்பிறையாக சந்திரனும் அதற்கு மிக அருகே செந்நிறமான செவ்வாயும் இணைந்து காட்சி அளிக்கும். பூமியில் இருந்து பார்க்கும் போது இரண்டு கோள்களுக்கும் இடையே மூன்று டிகிரி இடைவெளி மட்டுமே இருப்பது போல தோன்றும். ஆனால் உண்மையில் இரண்டு கோள்களுக்கும் இடையே கோடிக்கணக்கான மைல்கள் தொலைவு இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமி மற்றும் செவ்வாய் கோளின் சுற்றுப் பாதையில் சில மணித் துளிகள் இந்த நெருக்கமாக தோன்றும் நிகழ்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா என்பது சந்தேகம் என கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : மகாராஷ்டிராவில் இந்தியை 3 ஆவது மொழியாக்கும் திட்டம்..