Also Watch
Read this
Posted on: Mar 14, 2026 03:34 PM
By: Manigandan Raja

நடிகர் யோகிபாபு சுவாரஸ்ய தகவல் :
நடிகர்கள் அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோர் தங்களது இயக்குநர்களிடம் தன்னை பரிந்துரைத்தது குறித்த சுவாரஸ்ய தகவலை நடிகர் யோகி பாபு பகிர்ந்துள்ளார். விஜய் ஒரு படத்தில் கமிட் ஆனதும், அவருக்கு போன் செய்வேன் என்றும், உடனே அவர் இயக்குநரிடம் தன்னை பற்றி சொல்லுவதாக கூறுவார் எனவும்.
அதே போல் நடிகர் அஜித்குமாரும் தன்னை பரிந்துரைப்பார் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் Good Bad Ugly படத்தில் ஒரு ஃபாரீன் காட்சிக்கு தான் தான் சரியான தேர்வு என அஜித் பரிந்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஜெயிலர்-2 படம் சிறப்பாக தயாராகி வருவதாகவும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தன்னை வைத்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved