news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கேரள திரையுலகில் சாதனை படைத்த வாழ -2 திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

கேரள திரையுலகில் சாதனை படைத்த வாழ -2 திரைப்படம்

Vazha

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வாழ -2

லோகா சாப்டர் -1 படத்தின் சாதனையை முறியடித்தது :

கேரள திரையுலகில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற லோகாவின் சாதனையை வாழ 2 திரைப்படம் முறியடித்து வரலாறு படைத்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷனின் லோகா சாப்டர் 1 திரைப்படம் ஒட்டுமொத்தமாக கேரளாவில் 121 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில், வாழ 2 திரைப்படம் வெறும் 25 நாட்களில் 122 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது.

அதோடு, உலகளவில் இதுவரை 226 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் வாழ 2 திரைப்படம், எம்புரான் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படங்களில் சாதனையை விரைவில் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ  :

யூடியூபில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் பவர்ஹவுஸ் பாடல் இணையத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக மோனிகா பெலூசி பாடலும் 10 கோடி பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டி, மோகன்லால் நடிக்கும் பேட்ரியாட் படம் :

நடிகர் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது.

கர திரைப்படத்தின் “இறுதிகட்ட பணிகள் நிறைவு :

கர திரைப்படத்தின் “இறுதிகட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும்,பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுப்பதற்காக கடுமையாக உழைத்துள்ளோம் என புகைப்படத்தை பகிர்ந்து அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கு தகுதியாக இப்படம் இருக்கும் என்றார். நாளை தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

த்ரிஷ்யம் 3 படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு :

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், முரளி கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

த்ரிஷ்யம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு அதுவும் வெற்றிப் பெற்றநிலையில், தற்போது மூன்றாம் பாகம் த்ரஷ்யம் -3 உருவாகி உள்ளது.

Related Link
கென் கருணாஸுக்கு காந்தாரா பட இயக்குநர் பாராட்டு

கென் கருணாஸுக்கு காந்தாரா பட இயக்குநர் பாராட்டு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

0
17 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved