news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்
tv

Also Watch

tv

Read this

பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்

நீலகிரி

8

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nil 1(6)

நீலகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கேற்ப உள்ளூர் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காலத்தில் சமையல் எரிவாயு கிடைப்பதால் அதிக முன்பதிவு தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து சமையல் எரிவாயு விநியோகிஸ்தர்கள் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் ஏதும் தட்டுப்பாடுகள் உள்ளதா மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நீலகிரியில் 3 எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை செய்து வருவதாகவும், தற்போது வரை வீட்டு உபயோக சமையல் எரிவாயு எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லை எனவும், கடந்த ஆறு மாத கணக்கின்படி அடுத்த ஆறு மாதத்திற்கான இருப்புகள் உள்ளதாகவும் இதனால் வீட்டு உபயோக மெயில் எரிவாயு குறித்து பொதுமக்கள் எந்த விதமான பதட்டமும் அடைய வேண்டாம் என பேசினார்.

மின் அடுப்புகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் நிலையில் ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களிடம் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு கூட்டாக சமையல் செய்யும் முறையை எடுத்து கூறி இருப்பதாகவும், மேலும் மின்சார அடுப்புகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக அதிக மின்னழுத்த பயன்பாட்டிற்கு வாரிய நிறுவனத்திற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாக கூறினார்.

தேவையான மின்சாரம் வழங்கப்படும்
மேலும் இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 94987 94987 என்னும் கட்டணமில்லா தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறீய அவர், சுற்றுலா பயணிகள் வரவு அதிகரிக்கும் நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகளை உணவகங்கள் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு தேவையான உயர் அழுத்த மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து எரிவாயு நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உணவக உரிமையாளர்களின் சங்கங்கள் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். '

Related Link
6 பேருக்கு வாழ்வளித்த 6  வயது சிறுவன்

6 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுவன்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 40 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved