Also Watch
Read this
Posted on: Mar 14, 2026 11:53 AM
By: Fyrose Banu

மேலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட மக்கள்; வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில் ஊராட்சி நிர்வாக உடனடியாக
நடவடிக்கை எடுத்துள்ளது.
வேதனையுடன் வீடியோ வெளியிட்ட மக்கள்
கம்பூர் ஊராட்சி பிடாரன் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அங்கு குடிநீர் வசதி சரிவர இல்லாத காரணத்தால் காலி குடங்களுடன் பொதுமக்கள் தண்ணீர் கேட்டு வேதனையுடன் வீடியோ வெளியிட்டனர்.
காலி குடங்களுடன் தண்ணீரை தேடி அலைகிறோம்
தங்களது பிடாரன் நகர் குடியிருப்பு பகுதியில் பல நாட்களாக தண்ணீர் வசதி முறையாக இல்லாததால் மிகுந்த சிரமம் அடைவதாகவும், இங்குள்ள சின்டெக்ஸ் தொட்டிகள் காட்சி பொருளாக காட்சி அளிப்பதாகவும் இதனால் காலி குடங்களுடன் தண்ணீரை தேடி அலைவதாக தெரிவிக்கும் பொதுமக்கள், தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்டவை போதிய வசதிகள் இல்லாததால் மிகுந்த வேதனை அடைவதாகவும் துரிதமாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடனடி நடவடிக்கை
இது குறித்து நாம் கம்பூர் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தற்போது அங்குள்ள அடி குழாய் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். குடிநீர் முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டி, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வெளியிட்ட நிலையில், தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved