மகாராஷ்டிர அரசு பள்ளிகளில் இந்தி பாடத்தை மூன்றாவது மொழியாக கொண்டு வரும் மாநில அரசின் தீர்மானத்தை எரிக்கும் போராட்டத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில், 29 ஆம் தேதி இந்த அரசு தீர்மான எரிப்பு போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தீவிரமாக எதிர்த்து வரும் சிவசேனா, அது இந்தியை திணிக்கும் முயற்சி என தெரிவித்துள்ளது. ஆங்கிலம் மற்றும் மராத்தி மீடியம் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்தியை பொதுவான மூன்றாவது மொழியாக கற்பிக்கலாம் என கடந்த 17 ஆம் தேதி மாநில பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.இதையும் படியுங்கள் : இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்காவின் நிபந்தனைகள்..